ஒலிம்பிக் போட்டியில் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெண்கலப் பதக்கம் வென்றதைத் தொடர்ந்து, இந்தியாவின் ஸ்வப்னில் குசேலேக்கு, வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) இந்திய ரயில்வேயில் இரட்டிப்பு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மும்பையில் உள்ள இந்திய ரயில்வேயின் விளையாட்டுப் பிரிவு சிறப்பு பணியில், அவர் பயண டிக்கெட் பரிசோதகராக இரட்டிப்பு பதவி உயர்வு பெற்றுள்ளார்.
குசேலே 2015 முதல் மத்திய ரயில்வேயில் பணிபுரிந்து வருகிறார். மகாராஷ்டிராவின் கோலாப்பூர் அருகே உள்ள கம்பல்வாடி கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான அவர் 2012 முதல் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.
எனினும், சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகி 12 ஆண்டுகள் கழித்துதான் அவர் 2024இல் ஒலிம்பிக்கில் அறிமுகமானார். தனது முதல் அறிமுகத்திலேயே பதக்கமும் வென்று பெருமை சேர்த்துள்ளார்.