சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் 4ஆவது பயிலரங்கில், கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங்கின் உரை, மே 16ஆம் நாள் ஜியூஷி இதழில் கட்டுரையாக வெளியிடப்பட உள்ளது.
கட்சி உறுப்பினர்கள் அனைவரும் குறிப்பிட்ட கருப்பொருள் கொண்ட கல்வி நடவடிக்கையில் புதிய யுகத்திற்கான சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிச சிந்தனையை ஆழ்ந்த முறையில் கற்றுக் கொண்டு செயல்படுத்தவும், சித்தாந்த மற்றும் கோட்பாட்டு அடிப்படையை உறுதிப்படுத்தவும் முன்மாதிரியின் பங்குடன் ஊக்குவிப்பது என்பது, இப்பயிலரங்கை நடத்தியதன் நோக்கமாகும் என்று இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய யுகத்துக்கான சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிச சிந்தனையை கற்றுக் கொண்டு செயல்படுத்துவது, புதிய பயணத்தில் வளர்ச்சி அடைவதற்கான அடிப்படை தேவை. இச்சிந்தனையின் அறிவியல் முறைமை மற்றும் சாரம்சத்தை கடைப்பிடித்து, தத்துவத்தை நடைமுறையுடன் இணைக்க வேண்டும் என்றும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.