இன்றைய காலகட்டத்தில் மோசடி என்பதற்கு பஞ்சமே கிடையாது. திரும்பும் இடமெல்லாம் மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக செல்போன் மூலமாக பல மோசடிகள் நடைபெறுகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் லைகா நிறுவனம் சார்பாக நடிப்பதற்கு ஆட்கள் தேவை என்று சமீப காலமாக விளம்பரங்கள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன.
இவை அனைத்தும் பொய் என்று லைகா நிறுவனம் தற்போது தெளிவு படுத்தியுள்ளது. லைகா நிறுவனத்தால் தயாரிக்கப்படும் படங்கள் மற்றும் அது தொடர்பான அனைத்து செய்திகளும் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் எனவும் மற்றவற்றை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் என்று அந்த நிறுவனம் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது.