ஆடிப்பூரத்தையொட்டி சென்னை திருவொற்றியூரில் உள்ள கல்யாண வரதராஜ பெருமாள் கோயிலில் ஆண்டாள் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
முன்னதாக வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பெருமாள் மற்றும் ஆண்டாள், சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
அதனைத்தொடர்ந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கோயில் மண்டபத்தில் பெருமாளுடன், நாச்சியார் அலங்காரத்தில் ஆண்டாள் ஊஞ்சலாடினார். இதனை திரளான பக்தர்கள் தரிசித்தனர்.