தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள அம்மன் கோயில்களில் ஆடிப்பூரத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
அதன் ஒரு பகுதியாக காத்தாயி அம்மன் கோயிலில் பத்ரகாளி அம்மனுக்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து நடைபெற்ற வழிபாடுகளில் ஏராளமானோர் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர்.