சிக்கிமில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் மிகுந்த அச்சமடைந்தனர்.
சோரெங் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளி 4 ஆக பதிவானதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தகவல் தெரிவித்துள்ளது. நல்வாய்ப்பாக நிலநடுக்கம் காரணமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லையெனவும் கூறப்பட்டுள்ளது.