அதிக கிராஃபிக்ஸ் காட்சிகளுடன் உருவாகி வரும் மாயன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம் மாயன். இந்த படம் ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் மொழியிலும் வெளியிடப்பட உள்ளது.
இந்த படத்தின் 50 சதவீதத்திற்கும் அதிகமான காட்சிகள் கிராஃபிக்ஸ் முறையில் உருவாக்கப்பட்டு உள்ளன. இதில் வினோத் மோகன் மற்றும் பிந்து மாதவி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி படத்தை வெளியிடுவதற்கான பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.