விண்வெளி மையத்திற்கு சென்ற வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தான் பூமிக்கு திரும்புவார் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வீரர் புட்ச் வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர்.
ஆனால் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவர்கள் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. இவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கிய நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்கள் டிராகன் கேப்சூல் எனும் விண்கலத்தை தயாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் மீட்பு பணி அடுத்த மாதம் தொடங்கும் எனவும் , சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பூமிக்கு திரும்ப வாய்ப்பு உள்ளதாகவும் நாசா தகவல் தெரிவித்துள்ளது.