வங்காளதேசத்தின் இடைக்கால அரசுடன் தொடர்பில் இருந்து வருவதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
வங்காளதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தன் பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறினார்.
இதனால் அங்கு இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் நியமிக்கப்பட்ட நிலையில் வங்கதேச மக்களுக்கு ஜனநாயகமான எதிர்காலத்தை உறுதி செய்யவேண்டும் என இடைக்கால அரசை வலியுறுத்தியதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.