ஜம்மு காஷ்மீரில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அமர்நாத் யாத்திரைக்காக மற்றொரு குழுவினர் புறப்பட்டனர்.
இந்தாண்டுக்கான அமர்நாத் யாத்திரை கடந்த ஜூன் 29ம் தேதி தொடங்கியது. அதிலிருந்து தற்போது வரை சுமார் 5 லட்சம் பக்தர்கள் புனித குகைக் கோயிலை தரிசனம் செய்துள்ளதாக ஸ்ரீ அமர்நாத்ஜி ஆலய வாரியத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், மற்றொரு குழுவினர் பாந்தா சௌக் முகாமிலிருந்து அமர்நாத் யாத்திரைக்காக புறப்பட்டனர்.