திருநெல்வேலி மாவட்டத்தில் திசையன்விளை என்ற பகுதி உள்ளது. அங்கு அன்னை மூகாம்பிகையின் பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஒன்று இருக்கிறது. அந்த கோவிலில் மாலை நேரத்தில் பூசாரி பூஜைக்கான ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு தம்பதியினர் அங்கு வந்து தனது மருமகளுக்கு சுகப்பிரசவத்திற்காக வேண்டிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென சிலையின் கண்களில் இருந்து ஒளி வருவதை பார்த்து அவர்கள் வியந்தனர்.
அதன்பின் உடனடியாக அந்த தம்பதியினர் அங்கிருந்த பூசாரியை அழைத்து அம்மனின் கண்கள் திறப்பது போன்று காட்சியளிப்பதை பார்க்குமாறு கூறினார்.
இதைத்தொடர்ந்து அங்குள்ள பக்தர்கள் இதை பார்த்ததுடன் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதால் ஒரு மணி நேரத்தில் இந்த தகவல் காட்டுத்தீயை போல் பரவியது.
இதனால் ஏராளமான பக்தர்கள் இந்த அதிசயத்தை காண்பதற்காக அங்கு வந்தனர். இரவு நேரத்தில் கடுமையான கூட்ட அலை மோதியதால் காவல் துறையினர் கோவிலின் நடையை அடைக்குமாறு பூசாரிக்கு உத்தரவிட்டனர்.
அதன்பின் கோவில் நடையை அடைத்த பூசாரி மறுநாள் காலையில் கோவிலை திறந்து அம்மனின் கண்களை பார்த்தபோது அது இயல்பாகவே காட்சியளித்ததுள்ளது.