தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களாக மழையின் அளவு குறைந்ததால் ஒகேனக்கல் ஆற்றுக்கு வரும் நீரின் அளவு குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் நீர்பிடிப்புப் பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்ததால் ஆற்றுக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்தது.
அதன்படி நீரின் அளவு வழக்கத்தை விட 8 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதற்கிடையே அங்கு குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பதாக வனத்துறை தெரிவித்துள்ளது.