போதை இல்லா தமிழ்நாடு உருவாகும் வகையில் வருகின்ற ஆகஸ்ட் 12ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதி ஏற்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தற்போது இளைஞர்கள் மத்தியில் போதை பொருள் பயன்பாடு என்பது அதிகரித்துவிட்ட நிலையில் அதனை தடுக்க அரசு பலக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தற்போது பள்ளி கல்லூரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன், நான் போதை பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன், என்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களை போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன் என்று மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.