வங்கதேச வன்முறையைத் தொடர்ந்து, எல்லையில் நிலவும் அசாதாரண சூழலை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் சிறுபான்மையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதால், மேற்கு வங்க எல்லையில் அந்நாட்டு மக்கள் கூடினர். இதனால் இந்திய- வங்கதேச எல்லையில் பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில், எல்லையில் நிலவும் சூழலைக் கண்காணிக்க மத்திய அரசு பிரத்யேக குழுவை நியமித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வங்கதேசத்தில் உள்ள இந்தியர்கள், இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அந்நாட்டு அதிகாரிகளுடன் இந்தக் குழு தொடர்பில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
எல்லைப் பாதுகாப்பு படையின் கிழக்கு நிலை கூடுதல் இயக்குநர் ஜெனரல் தலைமையில் இந்தக் குழு செயல்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.