திண்டுக்கல்லில் 384 காவலர்களை ஒரே நேரத்தில் பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் 21 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பணியாற்றும் 384 காவலர்களை மாவட்டத்திற்குள்ளேயே இடமாற்றம் செய்து, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 3 வருடங்களாக ஒரே காவல் நிலையத்தில் வேலை செய்பவர்கள் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.