ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரம் கன அடியிலிருந்து 19000 கனஅடியாக தற்போது அதிகரித்துள்ளது.
நேற்று மாலை வரை 8000 கனாடியாக இருந்த நிலையில் இன்று காலை இரண்டு மடங்கு வரை அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
25 நாட்களுக்குப் பின்னர் கடந்த இரண்டு நாட்களாக பரிசல் பயணம் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் பரிசல் பயணத்திற்கு தடை விதிக்கப்படும் என கூறப்படுகிறது.
மேலும் சுற்றுலாப் பயணிகளும் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.