விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
மாயத்தேவன்பட்டி பகுதியில் ஜெயராஜ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. 20க்கும் மேற்பட்ட அறைகள் கொண்ட இந்த ஆலையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் வழக்கம்போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டபோது ரசாயன கலவையில் ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டது.
இதில் கார்த்திக், புலி குட்டி ஆகிய 2 தொழிலாளர்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில் 3 அறைகள் முற்றிலுமாக சேதமடைந்தன. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் உடல்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.