தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சற்று முன் தகவல் தெரிவித்துள்ளது.
இன்று குமரி, நெல்லை, தென்காசி, சேலம், திருச்சி, கரூர், ஈரோடு, கோவை, தேனி, மதுரை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.