சென்னையில் மூன்றாம் ரயில் முனைப்பு அமைக்கும் பணிகளுக்காக தாம்பரத்தில் கூடுதலாக நடைமேடை ஒன்பது மற்றும் 10 ஆகிய புதிய இரண்டு நடை மேடைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.
இதனால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதி நேரமாகவும் சில ரயில்கள் முழுவதுமாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதனைப் போலவே மின்சார ரயில் சேவையும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 15 இன்று முதல் ஆகஸ்ட் 17 வரை மூன்று நாட்களுக்கு தாம்பரம் ரயில் நிலையத்தில் எந்த எக்ஸ்பிரஸ் ரயில்களும் நிற்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஆனால் பயணிகளின் வசதிக்காக மாம்பலத்தில் கூடுதலாக ரயில்கள் நின்று செல்லும். சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் மற்றும் சென்னை எழும்பூர் வழியாக செல்லும் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் இந்த மூன்று நாட்களுக்கு தாம்பரத்தில் நிற்காது என்றாலும் பயணிகள் வசதிக்காக செங்கல்பட்டில் கூடுதலாக நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.