‘மருத்துவ படிப்பில் கூடுதலாக 75,000 இடங்கள் உருவாக்கப்படும்’ – சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி உரை..

Estimated read time 0 min read

டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி , நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

நாட்டின் 78 வது சுதந்திர தித்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு 11வது முறையாக தேசிய கொடியை ஏற்றினார்.

டெல்லியில் ராஜ்காட் பகுதியில் காலை முதலே மழை பெய்துவரும் நிலையில், மழைக்கு மத்தியிலேயே இன்று காலை 7.30 மணிக்கு மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அவர் தனது உரையில், “நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள். நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட உயிர் தியாகம் செய்த தியாகிகளை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்துவோம் என்றும், நாட்டை பாதுகாக்கவும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லவும் பலர் உழைத்து வருகின்றனர்.

ஆங்கிலேயர்களை எதிர்த்து 40 கோடி இந்தியர்கள்தான் போராடினர். தற்போது 140 கோடி மக்கள் உள்ள நிலையில் இந்தியாவின் வலிமை வளர்ச்சி அடைந்துள்ளது.

நாட்டுக்காக தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த கதாநாயகர்களுக்கு வீர வணக்கம் செலுத்துகிறேன். இந்திய நாட்டு விடுதலைக்காக தியாகம் செய்தவர்களுக்கு நாம் கடன்பட்டுள்ளோம்.

கடந்த சில ஆண்டுகளாக பல மோசமான பேரிடர்களை எதிர்கொண்டு வந்தாலும், அதில் இருந்து மீண்டு வருகிறோம். வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் துணைநிற்போம். பேரிடர் காலங்களில் உறவுகளை இழந்தவர்களுக்கு இந்த தேசம் துணை நிற்கும்

இந்தியா வல்லரசு நாடாக வேண்டும் என்றால் உள்நாட்டு உற்பத்தியில் சிறந்து விளங்க வேண்டும். உலகளவில் 3வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு என்ற புகழை இந்தியா விரைவில் அடையும்.

இந்திய நீதித்துறையில் நாட்டு மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். நீதித்துறைக்கு வலிமை சேர்க்க மாற்றங்களை கொண்டுவர வேண்டும்; சிறப்பான சீர் திருத்தங்களை மேற்கொள்வதற்காக புதிய திட்டங்கள் கொண்டுவரப்பட உள்ளன.

வங்கித்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்களால் மக்கள் பயனடைந்துள்ளனர். இதனால் வங்கித்துறை மேலும் வலிமை அடைந்துள்ளது. நடுத்தர மக்கள் சிரமமின்றி வாழ பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வரும் ஆண்டுகலில் ஆர்கானிக் உணவு மையமாக இந்தியாவை மாற்ற வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளில் மருத்துவக் கல்வியிடங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மருத்துவ படிப்பில் கூடுதலாக 75,000 இடங்கள் உருவாக்கப்படும். உலகின் உற்பத்தி மையமாக இந்தியாவை கொண்டுவர முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.

பாதுகாப்பு தளவாடங்கள் தயாரிப்பில் இந்தியா தனது தேவையை தேனே நிறைவு செய்துகொள்ளும் நிலையை எட்டும்.” என்று பிரதமர் மோடி தொடர்ந்து உரையாற்றி வருகிறார்.

Please follow and like us:

You May Also Like

More From Author