ரோபோக்களுக்குப் பயிற்சி அளிக்கும் வேலை வாய்ப்பு : டெஸ்லா நிறுவனம் அறிவிப்பு!

Estimated read time 1 min read

ரோபோக்களுக்குப் பயிற்சி அளிக்கும் வேலை வாய்ப்புக்களை எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் அறிவித்திருக்கிறது.

ஒரு மணி நேரத்துக்கு 4000 ரூபாய் வரை சம்பளம் தரப்படும் என்றும், ஒரு நாளைக்கு 8.5 மணிநேர வேலை பார்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம், 2021 ஆம் ஆண்டு டெஸ்லா போட் என்ற humanoid Optimus robots வகை ரோபோக்களை உருவாக்கத் தொடங்கியது.

இப்போது மூன்றாவது தலைமுறை டெஸ்லா போட் தயாரிப்பில் டெஸ்லா நிறுவனம் மும்முரமாக இருக்கிறது.

இந்த வகை ரோபோக்களுக்கு பயிற்றுவிப்பதற்கு டெஸ்லா அதற்கான தரவுகளைச் சேகரிக்க , மனிதர்களை வேலைக்கு அமர்த்தும் முடிவில் இருக்கிறது டெஸ்லா நிறுவனம்.

இந்தப் பணியில் சேர்வதற்கு தனது அதிகாரப் பூர்வ வலைத்தளத்தில் டெஸ்லா அறிவிக்கை கொடுத்திருக்கிறது.

ரோபோக்களின் உயரத்துக்கு ஏற்ப வேலைக்குத் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என்றும், ரோபோக்களின் இயக்கங்களைப் பிரதிபலிக்கும் வகையில் motion-capture suits மற்றும் VR headset போன்ற பிரத்யேக உடை அணிவதுடன், இந்த பணியில் சேர்பவர்கள், நீண்ட நேரம் நடக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது தரவு சேகரிக்க தினசரி ஒரு குறிப்பிட்ட பாதையில் நடக்க வேண்டும். motion-capture suits மற்றும் VR headset அணிந்து, திட்டத்திற்குத் தேவையான சில அசைவுகளைச் செய்ய வேண்டும்.அவ்வளவுதான் வேலை

இந்த வேலைக்கு ஒரு மணி நேரத்திற்கு 2,120 ரூபாய் முதல் 4,028 ரூபாய் வரை சம்பளம் வழங்கப் படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ரெக்கார்டிங் சாதனங்களை நிர்வகிக்க வேண்டும், சிறிய தொழில்நுட்ப சிக்கல்களைச் சமாளிக்க வேண்டும். பெற்ற தரவுகளைப் பகுப்பாய்வு செய்து பதிவேற்ற வேண்டும் மற்றும் இந்த பணியில் ஏற்படும் சிக்கல்கள் பற்றிய அறிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் உபகரணங்கள் நன்கு பராமரிக்கப்பட்டு வெவ்வேறு இடங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்படுவதையும் அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும். ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால், அவர்கள் உடனடியாக மேற்பார்வையாளருக்குத் தெரிவிக்க வேண்டும்.

ஆற்றல்மிக்க மற்றும் வேகமான பணிச்சூழலில் பணிபுரிய நோக்கமும், ரோபாட்டிக்ஸ் துறையில் ஆர்வமும், டெஸ்லா ரோபோக்களின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் விருப்பமும் உள்ள ஒருவரைத் தேடித் கொண்டிருக்கிறோம் என்றும் டெஸ்லா நிறுவனம் அறிவித்திருக்கிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author