அரசு தேர்வுகள் இயக்ககம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இன்று 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு துணை தேர்வுகள் எழுதி மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுக்கு இன்று மதிப்பெண் மாற்றம் உள்ள தனித்தேவர்களின் மதிப்பெண்கள் பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது. இந்த பட்டியலில் இடம்பெறாத வினா தாள்களில் எந்தவித மாற்றமும் இல்லை என தேர்வுத்துறை குறிப்பிட்டுள்ள நிலையில், மறு கூட்டல் மற்றும் மதிப்பெண் மற்றாம் உள்ள தனித்தேர்வர்கள் மட்டும் தங்களுடைய மதிப்பெண் விவரங்களை சரி செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை www.dge.tn.gov.in என்ற ஆன்லைன் முகவரியில் தெரிந்து கொள்ளலாம். இந்த இணையதளத்தில் பதிவென் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை குறிப்பிட்டு தங்கள் மதிப்பெண் விவரங்களை சரி பார்த்துக் கொள்ளலாம். மேலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு துணை தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.