தென் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று நமீபியா. இந்த நாட்டில் கடந்த அரை நூற்றாண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான வறட்சி நிலவுகிறது. அந்த நாட்டில் பசி மற்றும் பட்டினி அதிகரித்துள்ளதால் மக்கள் மிகுந்த வேதனையில் இருக்கிறார்கள். இதன் காரணமாக அந்நாட்டு அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதாவது அந்த நாட்டில் காட்டில் உள்ள வனவிலங்குகளை கொன்று அவைகளின் இறைச்சியை மக்களுக்கு உணவாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. அந்த நாட்டில் 14 லட்சம் மக்கள் பசியால் வாடும் நிலையில் அவர்களுக்காக 83 யானைகள் உட்பட மொத்தம் 724 வனவிலங்குகளை கொல்வதற்கு திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் தென்னாபிரிக்க நாடுகளில் உலகின் மிகப்பெரிய ஆப்பிரிக்க சவன்னா யானைகள் அதிக அளவில் இருக்கிறது. இவைகள் அழிந்து வரும் பட்டியலில் இருக்கும் நிலையில் கடந்த 3 தலைமுறைகளில் அவற்றின் எண்ணிக்கை பாதி அளவுக்கு குறைந்துள்ளது.
இருப்பினும் கடந்த 2022ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படு 2 லட்சத்து 27 ஆயிரத்திற்கும் அதிகமான யானைகள் குறையாமல் இருக்கிறது. ஆனால் தற்போது மக்கள் பசிக்காக அவைகளை கொல்ல அரசு முடிவு செய்துள்ளது யானைகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கடுமையான வறட்சி மற்றும் பசியின் காரணமாக யானைகள் கொல்லப்படுவதால் அவைகள் அழிந்து போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.