நவராத்திரி தசரா விழாவை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் கால்கோள் விழா விமர்சையாக நடைபெற்றது.
பாளையங்கோட்டை பாளை ஆயிரத்தம்மன் திருக்கோயிலில் காலை முதலே அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து கொடிக்கம்பத்திற்கு மஞ்சள், மலர்கள், வேப்பிலை உள்ளிட்டவை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு மேளதாளம் முழங்க 8 ரதவீதிகளில் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டது.
பின்னர் பால் ஊற்றி கொடிகம்பம் நடப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனர்.