கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை என்னும் பகுதியில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதியதால் விபத்து ஏற்பட்டது.
இந்நிலையில் மதுரையிலிருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த மற்றொரு பேருந்தும் இந்த விபத்தில் சிக்கியது.
தொடர்ந்து இந்த விபத்தில் 3 பேருந்துகள் மோதிக்கொண்டதால், அந்த வழியே வந்த மினி லாரி ஒன்று அரசு பேருந்து மீது மோதிய நிலையில் சாலையோரம் கவிழ்ந்தது. இவ்வாறு அடுத்தடுத்து சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மோதிய நிலையில் விபத்தில் இரண்டு பேருந்துகளின் ஓட்டுநர், லாரி ஓட்டுநர், பயணிகள் என அனைவரும் சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினர்.
இதனால் 15 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு காயங்கள் ஏற்பட்டது. அதனால் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.