உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார், அதில் ஒலிம்பிக், காமன்வெல்த் மற்றும் ஆசிய போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கு நேரடி அரசு வேலை வழங்கப்படும் என கூறியுள்ளார்.
இந்த திட்டத்தின் மூலம், திறமையான வீரர்கள் தங்கள் திறன்களை முழுமையாக வெளிப்படுத்தி, விளையாட்டு துறையில் முக்கிய சாதனைகளை ஏற்படுத்த முடியும்.
அவர்களுக்கு மாநில அரசின் பாராட்டும் வேலைவாய்ப்பும் கிடைப்பதால், இன்னும் பல இளம் வீரர்கள் தங்களுடைய திறமைகளை வளர்க்க ஆர்வம் காட்டுவார்கள் எனவும் , இது உ.பி. மாநிலத்தை விளையாட்டு துறையில் முன்னேற்ற உதவலாம் எனவும் சமூக ஆர்வலர்கள் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.