நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் நெல்சன் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்து, அதற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பேசிய நெல்சன், ஜெயிலர் இரண்டாம் பாகத்தின் அப்டேட் இன்னும் ஒரு மாதத்திற்குள் வரும் எனவும், இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தயாரிப்பு நிறுவனம் வெளியிடும் எனவும் தெரிவித்தார்.