4 வாராந்திர சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு!

Estimated read time 0 min read

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நான்கு வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை அக்டோபர் 6ம் தேதி முதல் நவம்பர் 24ம் தேதி வரையும், திங்கட்கிழமைகளில் இயக்கப்படும் மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி வாராந்திர ரயில் சேவை அக்டோபர் 7ம் தேதி முதல் நவம்பர் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் திருநெல்வேலி – சென்னை எழும்பூர் வாராந்திர சிறப்பு ரயில் செப்டம்பர் 12 முதல் நவம்பர் 28 வரையும், வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் எழும்பூர் – திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் செப்டம்பர் 13 முதல் நவம்பர் 29 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author