ராமநாதபுரம் கடற்பகுதியில் சுற்றுலா படகு சேவையை தொடங்க தமிழக அரசு திட்டம்

Estimated read time 0 min read

ராமநாதபுரம் மாவட்டத்தை சுற்றியுள்ள கடற்கரை பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் கப்பல் சேவையை இயக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் முதல் தூத்துக்குடி இடைப்பட்ட மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 21 தீவுகள் உள்ளன. இந்த 21 தீவுகளை சுற்றியுள்ள கடல் பகுதியில் 3,600 வகையான அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இதை தவிர இந்த தீவை சுற்றி உள்ள கடல் பகுதியில் பல வகையான பாசிகளும் உள்ளன.

இந்த 21 தீவுகளும் தேசிய கடல் சார் பூங்காவாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளை மூலம் கண்காணித்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

மேலும் ராமேஸ்வரத்தை சுற்றி பாம்பன் பாலம், தனுஷ்கோடி, முனைவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் மணி மண்டபம், தேவிப்பட்டினம், திருப்புல்லாணி, திருஉத்திரகோசமங்கை, ஏர்வாடி போன்ற சுற்றுலா தளங்கள் உள்ளது.

ராமநாதபுரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வரும் நிலையில், சுற்றுலாவை மேலும் மேம்படுத்த ராமநாதபுரம் கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகள் கப்பல் சேவையை இயக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி ராமேஸ்வரம் பாம்பன் தேவிபட்டினம் உள்ளிட்ட இடங்களை உள்ளடக்கி சுற்றுலா பயணிகள் கப்பல் சேவையை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சம் 50 பேர் பயணம் செய்யும் வகையில் மூன்று மணி நேரத்திற்கு மிகாமல் இந்த சுற்றுலா பயணிகள் கப்பல் சேவையை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கப்பல் சேவை இயக்க விருப்பம் உள்ள நிறுவனங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாம் என்று தமிழ்நாடு கடல் சார் வாரியம் அறிவித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author