அலகாபாத் நீதிமன்றத்தில் பாலியல் வன்கொடுமை தொடர்பான ஒரு வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் அதில் நீதிபதிகள் முக்கிய தீர்ப்பினை பிறப்பித்துள்ளனர். அதாவது ராகவ் குமார் என்பவர் மீது ஒரு பெண் பாலியல் புகார் கொடுத்துள்ள நிலையில் தன் மீது கொடுத்த புகாரினை தள்ளுபடி செய்யவேண்டும் என வலியுறுத்தி அவர் அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் ஒரு பெண்ணை பயமுறுத்தி அல்லது பொய்யான வாக்குறுதி கொடுத்து உடலுறவு கொண்டாலும் அது பாலியல் வன்கொடுமைக்கு தான் சமம் என்று நீதிபதிகள் கூறினர்.
அந்தப் பெண்ணை பயமுறுத்தி அல்லது பொய்யான வாக்குறுதி கொடுத்து உடலுறவுக்கு சம்மதிக்க வைப்பதும் குற்றமென்று கூறிய நீதிபதி இது பாலியல் வன்கொடுமை தான் என்று தீர்ப்பு வழங்கினார். மேலும் ராகவ் குமார் தாக்கல் செய்த மனுவையும் அவர் தள்ளுபடி செய்த உத்தரவிட்டார்