தமிழ்நாட்டில் போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக தற்போது 1,82,375 பேரின் ஓட்டுனர் உரிமைகளை ரத்து செய்ய வேண்டும் என தமிழக காவல்துறை பரிந்துரை செய்துள்ளது.
இது தொடர்பாக டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஜூலை முதல் போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக 76,15,713 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 39,924 டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் இதைத் தொடர்ந்து மேலும் 1.82 லட்சம் பேரின் டிரைவிங் லைசென்ஸை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.