300 நாளான விண்வெளி பயணம்! தலைமைப் பொறுப்பை ஏற்ற சுனிதா வில்லியம்ஸ்!

Estimated read time 1 min read

மெக்ஸிகோ : கடந்த ஜூன்-5ம் தேதி விண்வெளி சோதனைப் பயணமாக 9 நாள் பயணமாக சுனிதா வில்லியம்ஸும், புட்ச் வில்மோரும் ஸ்டர்லைனர் விண்கலம் மூலம் புறப்பட்டனர். 9 நாட்களில் திரும்ப வேண்டிய நிலையில் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சுமார் 300 நாட்கள் ஆகியும் இதுவரை பூமிக்கு திரும்பவில்லை.

இதனால், விண்வெளி மையத்திலேயே அவர்கள் பாதுகாப்பாக தங்கி வருகின்றனர். தற்போது, சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து வரும் சுனிதா வில்லியம்ஸுக்கு புதிதாக தலைமைப் பொறுப்பில் பணியமர்த்தியுள்ளனர். அதாவது, சர்வதேச விண்வெளி மையத்தில் Expectation 72 எனப்படும் அடுத்த சுற்று ஆராய்ச்சிகள் நடைபெறஉள்ளது.

இந்த ஆராய்ச்சிக் குழுவின் தலைவராக சுனிதா வில்லியம்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, Expectation 71 என இதற்கு முன் நடந்த ஆராய்ச்சிகள் நடைபெற்றது. இந்த ஆராய்ச்சி கடந்த செப்-23ம் தேதி முடிவடைந்தது. இந்த ஆராய்ச்சியின் அடுத்த சுற்றான Expectation 72 எனும் ஆராய்ச்சிக்கு தலைமை பொறுப்பை சுனிதா வில்லியம்ஸ் ஏற்றுள்ளார்.

முன்னதாக நடந்த Expectation 71 ஆராய்ச்சியின் சோதனைக்காக சென்ற போது தான் சுனிதா வில்லியம்ஸ், விண்கலம் பழுதாகி பூமிக்கு திரும்ப முடியாமல் அங்கு தங்கி வருகிறார். அதே போல இது போன்ற ஆராய்ச்சிகளுக்கு 7 பேர் கொண்ட குழுவை நாசா சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பும்.

ஆனால், ஏற்கனவே அங்கு சுனிதாவும், வில்மோரும் இருப்பதனால் தற்போது 5 பேர் கொண்ட குழுவை செப்-23ம் தேதி அனுப்பி வைத்துள்ளனர். மேலும், சுனிதா வில்லியம்ஸ் தலைமையில் நடந்து வரும் இந்த ஆராய்ச்சியும் நன்றாக முடித்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், 6 மாதங்களுக்கு ஒரு முறை எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி வைப்பார்கள். அதன்படி, அடுத்த ஆண்டு, “ஸ்பேஸ் எக்ஸ்” நிறுவனத்தின் ‘டிராகன் க்ரூ’ எனும் விண்கலம், சர்வதேச விண்வெளி மையத்திற்குச் செல்ல இருக்கிறது. இந்த ‘டிராகன் க்ரூ’ விண்கலத்தில் விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸையும், வில்மோரையும் பூமிக்கு அழைத்து வரத் திட்டமிட்டிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author