முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், 14 புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை மாற்றத்திற்கு பிறகான முதல் அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில், 38 ஆயிரத்து 700 கோடி ரூபாய் முதலீட்டிற்கான 14 புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
மொபைல் ஃபோன்களுக்கான உதிரிபாகங்கள், பாதுகாப்புத் துறைக்கான உபகரணங்கள், மருந்துபொருட்கள், காலணிகள் உள்ளிட்ட தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், 46 ஆயிரத்து 931 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஃபாக்ஸ்கான் குழுமத்தின் துணை நிறுவனமான யூசான் டெக்னாலஜி நிறுவனத்தின் மூலம் 14 ஆயிரம் வேலை வாய்ப்புகளும்,
அரியலூர் மாவட்டத்தில் ஃப்ரிடிரெண்ட் இன்டஸ்ட்ரியல் இந்தியா நிறுவனத்தின் மூலம் 15 ஆயிரம் வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும் என தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.