மதிமுக தலைவர் வைகோ திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது குறித்து தொண்டர்கள் பதற்றமடைந்த நிலையில், மதிமுகவின் பொதுச்செயலாளர் துறை வைகோ, தனது தந்தைக்கு சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெளிவுபடுத்தியுள்ளார்.
வைகோ சிகிச்சைக்காக சென்னையின் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, வைகோ வீட்டு மாடி படியில் இருந்து தவறி விழுந்தார்.
இதனால், அவரது தோள்பட்டையில் முறிவு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
அதன்பின், தோள்பட்டையில் ஸ்டீல் பிளேட் வைக்கப்பட்டு, சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
வயது முதிர்வு காரணமாக வைகோ பெரும்பாலான அரசியல் நிகழ்வுகளை சமீப காலமாக தவிர்த்து வருகிறார்.