கர்நாடக இசை பாடகர் டி.எம். கிருஷ்ணாவுக்கு, சென்னை மியூசிக் அகாடமி இந்தாண்டுக்கான ‘சங்கீத கலாநிதி’ விருதை அறிவித்திருந்தது நினைவிருக்கலாம்.
இந்த விருதுடன் எம். எஸ். சுப்புலட்சுமி பெயரிலான ரூ. 1 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்படவிருந்தது.
ஆனால், இந்த முடிவு, கர்நாடக இசைக்கலைஞர்களிடையே கடும் அதிர்ச்சியையும் மனவேதனையையும் ஏற்படுத்தியது.
ஆரம்பத்தில் இசை பாடகிகளான ரஞ்சனி மற்றும் காயத்ரி தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்திய போது இந்த விவகாரம் வெளியே வந்தது.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் MS சுப்புலக்ஷ்மி பெயரில் விருது வழங்க தடை விதித்துள்ளது.