இந்திய அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட்…!

Estimated read time 0 min read

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. முதல் போட்டி நவம்பர் 22ம் தேதி முதல், 26ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்திய அணிக்கு வேகப்பந்துவீச்சாளர் பும்ரா தலைமை தாங்குகிறார்.

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் மனைவிக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதால் அவர் இந்தியாவில் உள்ளார். இதன் காரணமாக அவர் ஆஸ்திரேலியாவுக்கு செல்லாத நிலையில், முதல் போட்டிக்கு பும்ரா தலைமை தாங்குகிறார்.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஷ்வால் டக் அவுட் ஆன நிலையில், அடுத்து வந்த படிக்கல்லும் ரன் எதுவும் இன்றி வெளியேறினார். கே.எல்.ராகுல் 26 ரன்களிலும், விராட் கோலி 05 ரன்களிலும், ஜுரேல் 11 ரன்களிலும், வாஷிங்டன் சுந்தர் 4 ரன்களிலும் வெளியேறினர். அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 41 ரன்களை எடுத்தார். இறுதியில் இந்திய அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

Please follow and like us:

You May Also Like

More From Author