சபரிமலையில் பக்தர்கள் நெரிசல் இல்லாதபோதும் காணிக்கை மற்றும் கோயில் வருமானம் அதிகரித்துள்ளது.
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 16-ம் தேதி மண்டல பூஜைகள் தொடங்கியது. முன்பதிவு மூலம் தினசரி 80 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு வரும் நிலையில், 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்களின் வருகை பல்வேறு காரணங்களால் தடைபடுகிறது.
இதனால் நெரிசலில் சிக்கும் சூழல் ஏற்படாமல் பக்தர்கள் விரைந்து தரிசனம் மேற்கொண்டு ஊர் திரும்பும் நிலை தொடர்ந்து வருகிறது. அதேபோல பக்தர்கள் நெரிசல் இல்லாதபோது காணிக்கை மற்றும் கோயில் வருமானம் அதிகரித்துள்ளதால் தேவசம் போர்டு அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குறிப்பாக கடந்த 20-ம் தேதி வரை காணிக்கையாக 3 புள்ளி 18 கோடி ரூபாயும், அரவணை விற்பனையில் 9 புள்ளி 52 கோடி ரூபாயும், அப்பம் விற்பனையில் 1 புள்ளி 26 கோடி ரூபாயும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அரவணை விற்பனை 2 புள்ளி 16 கோடி ரூபாயும், அப்பம் விற்பனை 22 புள்ளி 40 லட்சம் ரூபாயும் அதிகரித்துள்ளதாக தேவசம் போர்டு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.