தமிழகத்தில் கனமழை எதிரொலியால் பல்வேறு மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது பள்ளிக்கல்வித்துறை அரையாண்டு தேர்வு செய்முறை குறித்து ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 2ஆம் தேதி முதல் டிசம்பர் 6ஆம் தேதிக்குள் செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் கனமழை காரணமாக டிசம்பர் 2-ம் தேதி தொடங்கிய டிசம்பர் 6-ம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க வேண்டும் எனவும், அதற்காக தற்போதைய மாணவர்களை தயார் செய்ய வேண்டும் எனவும் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.