திருச்செந்தூரில் பாகன் பலியான சம்பவம்- கோவில் யானைகளை பராமரிக்க வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

Estimated read time 0 min read

திருச்செந்துாரில் கோவில் யானை தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவங்களை தொடர்ந்து, தமிழகத்தில் கோவில்கள், மடங்களில் உள்ள யானைகளை மிகுந்த கவனமுடன் பராமரிக்க வேண்டும் என்று அறநிலையத்துறை சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. இதன்படி, யானைகளை கவனமுடன் பராமரிக்க, 39 விதிமுறைகளை அறிவுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “

  • யானைகளை உறுதியான மண் அல்லது புல்தரையில் நிறுத்தி வைக்க வேண்டும். இயற்கையான வெளிச்சம், காற்றோட்டத்துடன் கான்கிரீட் கொட்டகை அமைக்க வேண்டும்
  • யானையின் கால், நகக்கண், தந்தங்களில் தோக்கா மல்லி எண்ணெய் விட்டு பராமரிக்க வேண்டும். யானையின் எடை, வயதுக்கு ஏற்ப உணவுகளை உள்ளூர் கால்நடை மருத்துவரின் ஆலோசனையுடன் வழங்க வேண்டும்
  • யானைக்கு வெப்பம் அதிகரிக்கும் போது, அதை சங்கிலியால் பிணைத்து தேவையான உணவு, தண்ணீர் அருகில் வைக்க வேண்டும். மது அருந்தியவரை யானையின் அருகில் செல்ல அனுமதிக்க கூடாது
  • யானைகளுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். உணவு அல்லது பணத்திற்காக, பிச்சை எடுக்க யானையை வெளியே அழைத்துச் செல்லக்கூடாது
  • வாரத்திற்கு நான்கு முறையும், கோடை காலத்தில் தினமும் குளிப்பாட்ட வேண்டும். சாதாரண யானையின் உடல் எடையில், 5 சதவீத எடையளவு உணவு வழங்க வேண்டும்
  • யானைகள் பராமரிப்பு பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும். பாகன்கள் கூடுமானவரை அங்குசத்தை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்
  • கோவில் திருவிழா, சாமி புறப்பாடு நாட்களில், யானையை கொண்டு செல்லும் போது பொதுமக்களிடம் காசு பெறுவதையோ, ஆசிர்வாதம் செய்வதையோ அனுமதிக்கக் கூடாது. வாசனை திரவியங்களை பயன்படுத்துபவர்களை, யானையின் அருகில் செல்ல அனுமதிக்கக் கூடாது
  • யானைகள் இல்லாத கோவில்களில், திருவிழாவிற்கு தனியார் யானைகளை பெற்று பயன்படுத்தக்கூடாது. பட்டாசுகள் வெடிக்கும் இடங்கள் மற்றும் மின்கருவிகள் உள்ள பகுதிகளில் யானைகளை அழைத்துச் செல்லக்கூடாது
  • தினமும், 10 கி.மீ., துாரத்திற்கு நடைபயிற்சி அளிக்க வேண்டும்
  • யானைகளை பராமரிப்பதற்கு வனத்துறையிடமிருந்து சான்றிதழ் பெற வேண்டும். அதை ஐந்தாண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Please follow and like us:

You May Also Like

More From Author