சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா தி ரைஸ் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாஸில் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.
இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. தற்போது புஷ்பா 2 படத்தின் இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு புஷ்பா 2 தி ரூல் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. புஷ்பா 2 படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படம் டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. புஷ்பா 2 படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்தது.
படம் ரிலீஸ் ஆக உள்ளதால் பட குழுவினர் ப்ரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் குறித்து இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் சில கருத்துக்களை கூறியுள்ளார்.
இதனால் சர்ச்சை எழுந்தது. இதனால் புஷ்பா 2 பின்னணி இசை பணியிலிருந்து தேவி ஸ்ரீ பிரசாத் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக இசையமைப்பாளர் சாம் சிஎஸ் சேர்க்கப்பட்டுள்ளார். இதேபோல குட் பேட் அக்லி படத்திலிருந்து ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக சேர்க்க உள்ளதாக கூறப்படுகிறது.