தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வரும் பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன், சிறுநீரக பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
‘லத்திகா’ என்ற படத்தின் மூலம் சுயவிளம்பரம் செய்து கொண்ட பவர்ஸ்டாரை, ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா?’ படத்தின் மூலம் முன்னணி காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார் சந்தானம்.
அதன் பின்னர், பாலாவின் பரதேசி, ஷங்கரின் ஐ உள்ளிட்ட படங்களில் சிறு வேடத்தில் நடித்து வந்தார்.
ஆனால் அவர் தனியாக தயாரித்த படங்களுக்கு பணம் தராமல் போனதால் பைனான்சியர்கள் அவரை கடத்தி மிரட்டியது, அவர்களிடம் பணத்தை தராமல் இழுத்தடித்தது உள்ளிட்ட பல சர்ச்சைகளில் அவர் சிக்கினார்.
தற்போது, உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் கிண்டி பல்நோக்கு மருத்துவமனையில் ஒரு வாரம் தங்கி சிகிச்சை பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.