தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயில், பழமை மாறாமல் திருப்பணி செய்யப்பட்டதற்காக யுனஸ்கோ நிறுவனம் விருது வழங்கி கௌரவித்துள்ளது.
துக்காச்சி கிராமத்தில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோயில், மாமன்னர் விக்கிரம சோழர் காலத்தில் கட்டப்பட்டது. இக்கோயிலுக்கு திருப்பணி செய்யப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது.
இந்நிலையில் கோயிலின் திருப்பணி பழமை மாறாமல் செய்யப்பட்டதற்காக யுனெஸ்கோ நிறுவனம் விருது வழங்கி கௌரவித்துள்ளது.