நாளை ரஷ்யா செல்கிறார் ராஜ்நாத்சிங்!

Estimated read time 1 min read

இந்தியா – ரஷ்யா ராணுவ ஒத்துழைப்பு கூட்டத்தில் பங்கேற்பதற்காக, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டிசம்பர் 8 முதல் 10-ம் தேதி வரை ரஷ்யா செல்லவுள்ளார்.

இந்திய – ரஷ்யா இடையேயான ராணுவ மற்றும் ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான 21-வது கூட்டம் டிசம்பர் 10-ம் தேதி மாஸ்கோவில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை முதல் 10ம் தேதி வரை ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

அப்போது டிசம்பர் 9-ல் கலினின் கிராட் நகரில் இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் துஷீல் கப்பலை ராஜ்நாத் சிங் தொடங்கி வைக்கிறார். இந்த பயணத்தின் போது மேம்பட்ட S-400 ஏவுகணை வான் பாதுகாப்பு அமைப்புகளை இந்தியாவிடம் விரைந்து வழங்கும்படியும் ரஷ்யாவிடம் அவர் வலியுறுத்தவுள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டில் ரஷ்யாவிடம் இருந்து ஐந்து S-400 வான் பாதுகாப்பு அமைப்புகளை கொள்முதல் செய்ய 5 புள்ளி 43 பில்லியன் டாலருக்கு இந்தியா ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author