கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா தன்னுடைய 92வது வயதில் இன்று காலமானார்.
முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், கர்நாடக முதல்வருமான சோமனஹள்ளி மல்லையா கிருஷ்ணா (SM கிருஷ்ணா) 2009 முதல் 2012 வரை இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றியவர்.
வயது மூப்பு காரணமாக உடல்நலம் குன்றியிருந்த அவர், இன்று அதிகாலை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
எஸ்.எம்.கிருஷ்ணாவின் மறைவுக்கு அதிர்ச்சி தெரிவித்துள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, “மாநில மற்றும் மத்திய அமைச்சராகவும், முதலமைச்சராகவும் கிருஷ்ணாவின் சேவை ஈடு இணையற்றது. IT-BT துறையின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக கர்நாடகா எப்போதும் அவருக்குக் கடன்பட்டிருக்கும். குறிப்பாக முதலமைச்சராக.” என பதிவிட்டார்.