உக்ரைன்- ரஷ்யா இடையே போர் நிறுத்தம் பேச்சுவார்த்தை உடனடியாக தொடங்கப்பட வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போரினால், பல ஆயிரக்கணக்கான அப்பாவி உயிர்கள் பலியாகி இருப்பதுடன், ஏராளமான குடும்பங்கள் சீரழிந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்ந்தால், நிலைமை மோசமாகி விடும் என்பது ரஷ்ய அதிபர் புதினுக்கு நன்றாக தெரியும் என்று கூறிய டிரம்ப், உக்ரைன்- ரஷியா போர் எப்போது முடிவுக்கு வரும் என உலகமே காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.