திருவண்ணாமலை மாவட்டத்தில் தீப திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த விழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்ற நிலையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.
இந்நிலையில் வருகிற டிசம்பர் 13ஆம் தேதி தீபத் திருவிழா கொண்டாடப்படும் நிலையில் தற்போது அதனை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே தீபத் திருவிழாவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு டிசம்பர் 12 முதல் 3 நாட்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் 156 பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை என்பது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் மழை பெய்த நிலையில் நிலசரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும் என்ற சந்தேகம் இருந்த நிலையில் அமைச்சர் சேகர்பாபு கண்டிப்பாக மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும் எனவும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மனித சக்திகளை கொண்டு அது செயல்படுத்தப்படும் என்று உறுதி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.