மும்பையில் மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸை தொழிலதிபர் கெளதம் அதானி சந்தித்து பேசினார்.
தேவேந்திர ஃபட்னாவிஸின் சாகர் இல்லத்தில் மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்பு விழாவில் அதானி பங்கேற்க இயலாததால், முதலமைச்சரின் வீட்டில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.