தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் தொடங்கினார். தற்போது விஜயின் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை என்பது நடைபெற்று வருகிறது. நடிகர் விஜயின் முதல் மாநாடு கடந்த அக்டோபர் மாதம் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் 8 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து சமீபத்தில் தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. பின்னர் முதல் மாநாடு நடந்த இடம்கொடுத்த விவசாயிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இந்நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய் களம் காணும் நிலையில் அதற்கு முன்னதாக ஒரு புதிய டிவி சேனலை தொடங்க இருப்பதாக தகவல் வெளிவந்தது. அந்த வகையில் வாகை tv என்ற புதிய சேனலை விஜய் தொடங்க உள்ளதாக தற்போது கூறப்படுகிறது. மேலும் திமுக மற்றும் அதிமுக என பல்வேறு கட்சிகளுக்கு தனித்தனியாக சேனல்கள் இருக்கும் நிலையில் விஜய்யும் தனக்காக ஒரு தொலைக்காட்சி சேனலை தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#VaagaiTamil pic.twitter.com/Rnr2ic4Wud
— தமிழக வெற்றிக் கழகம் (செய்திகள்) (@TVK_CbeNorth) December 10, 2024