வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி மேற்கு மற்றும் வடமேற்கே, இலங்கை மற்றும் தமிழ்நாடு கடற்கரை பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
எனினும் அதன் வேகம் காரணமாக அது புயலாக மாறும் வாய்ப்பு தற்போது இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும், புதுச்சேரியிலும் இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழை தொடரும் எனக் கூறப்பட்டுள்ளது.