அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் 1 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி உட்பட “முழுமையான அனுமதிகளை” வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
விரைவான அனுமதிகளுக்கு யார் தகுதி பெறுவார்கள் என்பதை அவர் குறிப்பிடவில்லை என்றாலும், இயற்கை எரிவாயு குழாய்கள், ஏற்றுமதி முனையங்கள், சூரியஒளி பண்ணைகள் மற்றும் கடல் காற்றாலைகள் உள்ளிட்ட ஆற்றல் திட்டங்கள் பில்லியன் டாலர் அளவுகோல்களை சந்திக்கின்றன.
செவ்வாயன்று தனது Truth Social செயலியில் ஒரு இடுகையில், டிரம்ப் இதனைத்தெரிவித்தார்.